2009-09-03 13:50:34

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவருக்கான தானியங்களை திருச்சபையின் பிறரன்பு நிறுவனங்கள் வழியாக விநியோகிப்பதற்கான மாநில அரசின் திட்டத்திற்கு இந்து தீவிரவாத குழுக்கள் எதிர்ப்பு


செப்.03,2009. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவருக்கான உணவு தானியங்களை கத்தோலிக்கத் திருச்சபையின் பிறரன்பு நிறுவனங்கள் வழியாக விநியோகிப்பதற்கான மாநில அரசின் திட்டத்திற்கு இந்து தீவிரவாத குழுக்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்தக் கண்டனத்தின் ஒரு கட்டமாக, கடந்த திங்களன்று சிலர் ராஞ்சி கர்தினால் டெலஸ்போர் டோப்போவின் உருவப் படத்தை எரித்ததோடு திருச்சபைக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுனரின் ஆலோசகர் டி.பி.சின்ஹா, ராஞ்சி கர்தினால் டோப்போவை சந்தித்து கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திருச்சபையின் இவ்வுதவிக்கு விண்ணப்பித்தார்.

எனினும் அரசின் இந்த நடவடிக்கை, ஏழை பூர்வீக இன மக்களை கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என இந்து தீவிரவாத குழுக்கள் பயப்படுகின்றன என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.