2009-09-03 16:51:11

5ஆம் ஆசிய இளையோர் மாநாடு 


செப். 3, 2009. வரும் நவம்பர் 23 முதல் 27 வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள 5 ஆம் ஆசிய இளையோர் மாநாட்டிற்கான  ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆசிய இளையோரே, ஒன்று சேருவோம், இறைவார்த்தையையும், நற்கருணை வாழ்வையும் பகிர்வோம் - என்பது இந்த இளையோர் மாநாட்டிற்கான மையப் பொருள்.

ஆசியாவின் 22 நாடுகளைச் சார்ந்த 2,500 பேர் இந்த மாநாட்டில்  கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், 2006 இல் இந்த மாநாடு ஹாங்காங்கில்  நடைபெற்றது. இந்த முறை ஆசியாவிலேயே கத்தோலிக்கர்களின் விழுக்காடு அதிகமாக உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யும் வண்ணம் ஹாங்காங்க், தைவான் நாடுகளில் திருப்பயணங்களும், திருவிழிப்புகளும் அண்மையில் இளையோரால் மேற்கொள்ளப்பட்டன.

மாநில உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த 20 வயது இளைஞன் ருடால்ப் செரால்வோ இந்த மாநாடு பற்றி கூறுகையில், ஆசியாவைச் சூழ்ந்து வரும் பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்க நமது இளைய சமுதாயம் நற்கருணையிலிருந்து சக்தி பெற வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.







All the contents on this site are copyrighted ©.