2009-09-02 16:13:51

பாகிஸ்தானில் அனைத்து சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படுமாறு உலக கிறிஸ்தவ சபைகள் அவை வலியுறுத்தல்


செப்.02,2009. பாகிஸ்தானில் அனைத்து சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படுமாறு உலக கிறிஸ்தவ சபைகள் அவை அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

“பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தலும் சிறுபான்மை மதத்தவரின் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இக்கிறிஸ்தவ சபைகள் அவையின் மையக் குழு, தேவநிந்தனை சட்டம், சிறுபான்மை மதத்தவரை பலிகடா ஆக்குவதற்கும் நசுக்குவதற்குமான முக்கிய காரணியாக மாறி வருகின்றது என்று கூறியது.

சிறுபான்மை மதத்தவர், பயத்திலும் நடுக்கத்திலும் வாழ்ந்து வருகின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, பாகிஸ்தானில் 1986ம் ஆண்டில் குற்றவியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் குறை கூறியது.

பாகிஸ்தானில் 1988ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 647 பேர் தேவநிந்தனை சட்டத்தை மீறினார்கள் என்று குற்றம் சாட்டப்ட்டனர். அண்மை ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.