2009-08-31 16:20:17

இறைவனின் கொடையான சுற்றுச்சூழலைப் பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு


ஆக.31,2009. குழந்தைகள் தங்களுக்கான இறைதிட்டத்தை கண்டு கொள்வதில் பெற்றோர்கள் ஆற்றும் பங்கு குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பாராட்டிப் பேசினார்

இஞ்ஞாயிறன்று காஸ்தெல் கண்டோல்போ திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லத்திலிருந்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கடந்த திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட அன்னையர்களின் பாதுகாவலியான புனித மோனிக்காவின் திருவிழாவைக் குறிப்பிட்டு புனித அகுஸ்தீனாரின் மனந்திரும்பலில் இப்புனிதையிந் பெரும் பஙகைச் சுட்டிக் காட்டினார்.

கிறிஸ்தவத்தின் வரலாறு திருச்சபையின் குருக்களோடு இணைந்து சென்ற பல புனிதர்கள் மற்றும் எண்ணற்ற குடும்பங்களின் எடுத்துக்காட்டுகளால் நிறைந்துள்ளது எனவும் பாப்பிறை கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் தனது மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைவனின் கொடையான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் சிறப்பு அர்ப்பணத்தையும் சுட்டிக்காட்டினார். இதில் பணக்கார நாடுகளின் பொறுப்புணர்வையும் அவர் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.