2009-08-29 15:08:54

ஏழ்மைக்குக் காரணமாக இருக்கும் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு ஐ.நா.நிறுவனம் தீவிரமாக நடவடிக்கை எடுக்குமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்


ஆக.29,2009. ஏழ்மைக்குக் காரணமாக இருக்கும் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு ஐ.நா.நிறுவனம் தீவிரமாக நடவடிக்கை எடுக்குமாறு சமயத் தலைவர்களும் பல்சமய நிவாரண அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊழலும் வறுமையும் அநீதிக்கு இடமளிக்கின்றன மற்றும் சமத்துவ பொருளாதார வளர்ச்சியையும் நிலையான முன்னேற்றத்தையும் பின்னுக்குத் தள்ளுகின்றன என்று, பல மதங்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைவர்களும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட உதவி நிறுவனங்களும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்கு எழுதிய கடிதம் கூறுகிறது.

பிரிட்டனின் காப்போட், கிறிஸ்டியன் எய்ட், இசுலாம் நிவாரண நிறுவனம், ஆஷ்திரேலிய கிறிஸ்தவ சபை அமைப்பு எனப் பல அமைப்புகள் இணைந்து எழுதிய கடிதத்தில், பொதுப் பணத்தைச் சுரண்டுவது, முதலீடுகளைக் குறைப்பது, வருவாய்வரிக் குறைப்புப் போன்றவை, ஏழைகளையும் நலிந்தவர்களையும் கடுமையாய்ப் பாதிக்கின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளன.

உலகில் ஏழ்மை குறைப்பு குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இவ்வாண்டில் கூட்டம் நடத்தவுள்ளதை முன்னிட்டு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



 








All the contents on this site are copyrighted ©.