2009-08-29 15:06:55

அப்தெல்பாசெட் அலி முகமெத் அல்-மெகிராஹிக்கு நீதியோடுகூடிய இரக்கம் காட்டப்பட்டிருக்க வேண்டும், அமெரிக்க சமயத் தலைவர்கள்


ஆக.29,2009. 270 பேர் கொல்லப்பட்ட 1988ம் ஆண்டின் விமானக் குண்டு வெடிப்பில் குற்றவாளியாகச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட லிபிய நாட்டவர் மீது இரக்கம் காட்டப்பட்டிருப்பதோடு நீதியும் இடம் பெற வேண்டுமென அமெரிக்க ஐக்கிய நாட்டு திருச்சபைத் தலைவர்கள் அழைப்புவிடுத்தனர்.

லாக்கர்பி என்ற ஸ்காட்லாண்ட் நகருக்கு மேலே பான் ஆம் 103 என்ற விமானம் பறந்த போது வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 270 பேர் இறந்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே மனிதரான அப்தெல்பாசெட் அலி முகமெத் அல்-மெகிராஹி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கருணையின் பேரில் இம்மாதம் 20ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடுதலை குறித்தத் தனது வருத்தத்தைத் தெரிவித்த நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன், இயேசு கிறிஸ்துவைப் பின்செல்பவர் என்ற முறையில் கருணையில் தான் நம்பிக்கை கொண்டிருந்தாலும் இந்தக் கருணை எப்பொழுதும் நீதியோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்.

இவ்வளவு துன்பம் வேதனை மற்றும் மரணங்களுக்குப் பொறுப்பான ஒருவரை விடுதலை செய்வதன் மூலமாக இல்லாமல் வேறு பல வழிகளில் அவர் மீதான இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று பேராயர் மேலும் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.