2009-08-28 20:41:34

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மங்கோலிய மக்களுக்கு உதவி . 280809 .


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மங்கோலிய மக்களுக்கு தொண்டு நிறுவனம் உதவி வருகிறது . மங்கோலியாவின் உலன் பாத்தோர் பகுதியில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதில் 34 பேர் இறக்க நேரிட்டதோடு அங்கு மக்கள் பெரும் பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் . சென்ற மாத இறுதியில் கொட்டிய கனமழை காரணமாக 20,000 பேர் வீடுகளையும் பொருட்களையும் இழந்து தவித்தனர் . பல வாரங்களுக்குப் பிறகும் அந்த மங்கோலியர்கள் கடுமையான தட்பவெப்பம் , சுத்தமான தண்ணீர் இல்லாமை போன்ற தீமைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர் . அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காரித்தாஸ் தொண்டு நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. தங்குவதற்குக் கூடாரங்களை அமைத்து , தண்ணீர் வசதியையும் செய்து தந்துள்ளது . குளிர் காலத்தில் தட்ப வெப்பம் பூஜ்யத்துக்குக் கீழே செல்லும் என்பதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கோலிய மக்களுக்கு துணையாக காரித்தாஸ் செயல்படும் என மங்கோலியக் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் தந்தை பியரெட் கசேமுவானா தெரிவித்துள்ளார் . காரித்தாஸ் ஸ்பெயின் 20 லட்சம் ரூபாய்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.