2009-08-28 20:39:59

நேபாளத்தில் வெப்பமாற்றம். பல இலட்சம் ஏழைகள் பாதிக்கப்படுவர்.280809.


நேபாளத்தில் வெப்பமாற்றம் காரணமாக பல இலட்சம் ஏழைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அகில உலகத் தொண்டு நிறுவனம் ஆக்ஸ்பாம் தெரிவிக்கிறது . விவசாயத்தில் அறுவடைகள் பாதிப்பு , தண்ணீர் பற்றாக்குறை , வெப்பம் அதிகரித்தல் போன்ற தீமைகளால் பல இலட்சம் நேபாள மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லவேண்டிய அபாயம் இருப்பதாகவும் ஆக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்துள்ளது . சென்ற ஆண்டு மிகவும் வறட்சியான குளிர்காலம் , மற்றும் எதிர்பாராத மழை காரணமாக நில அரிப்பு போன்றவை இப்பொழுதே பாதிப்பைத் தொடங்கியுள்ளதாக மேலும் ஆய்வு தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.