2009-08-28 20:36:58

ஆந்திர மாநில அரசு தலித் கிறிஸ்தவர்களுக்குச் சம உரிமை .280809 .


ஆந்திர மாநில அரசு தலித் கிறிஸ்தவர்களுக்கும் பிற தலித் மக்களுக்கு உள்ள உரிமைகளை வழங்க முடிவுசெய்துள்ளது .

இதற்கான சட்டமன்ற ஒப்புதலையும் ஆந்திர அரசு பெற்றுள்ளது . இந்தத் திட்டத்தை ஆந்திர முதல்வர் திரு. ஒய் .எஸ் . ராஜசேகர ரெட்டி மத்திய அரசிடம் கூறி கிறிஸ்தவத் தலித் மக்களுக்கும் பிற இந்து சமய தலித் மக்களுக்கு வழங்கப்படும் சம உரிமைகளை வழங்குமாறு இந்திய அரசு சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியுள்ளார் .

இந்தத் திட்டத்தை ஆந்திரமாநிலத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் , அங்கு முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் , மற்றும் பிரஜா ராயம் , தெலங்கானா ராஷ்டிர சமிதி , மஜ்லிஸ் முஸ்லிமீன் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரித்துள்ளன . தீவிரவாத பிஜேபிக்கட்சியும் , லோக் சட்டாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன .

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கும் இதே சலுகைகளை வழங்க முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி உறுதிமொழி கூறியுள்ளார். பல காலமாகக் காத்திருக்கும் இந்த தலித்கிறி்ஸ்தவர்களுக்கான உரிமைகளை ஆந்திர அரசு தருவதற்கு முன் வருவதை கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.