2009-08-26 15:03:29

ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கிய முதலாமாண்டை இந்தியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் திருவழிபாடுகளை நடத்தி நினைகூர்ந்தனர்


ஆக.26,2009. ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கிய முதலாமாண்டை நினைவு கூரும் விதமாக இந்தியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் திருவழிபாடுகளை நடத்தினர்.

புதுடெல்லியில் இச்செபவழிபாட்டை முன்னின்று நடத்திய டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, இந்தியாவின் இந்த கிழக்கு மாநிலத்தில் இன்னும் பதட்டநிலை இருப்பதாகச் சொல்லி, மாநில மற்றும் மத்திய அரசுகள் அமைதியைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இயலாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணமும் மறுவாழ்வும் வழங்கவும், ஒரிசாவி்ல் நீதியை நிலைநாட்டவும் மாநில அரசுக்கு அழைப்புவிடுத்தார் டெல்லி பேராயர் கொன்செஸ்சாவோ.

கந்கமால் மாவட்டத்தில் இந்துமதத்த தலைவர் சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி யும் அவரோடு சேர்ந்த நால்வரும் மாவோயிஸ்டுகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்கள் தொடங்கின. நான்கு மாதங்கள் இடம் பெற்ற இத்தாக்குதல்களில் 90 பேர் வரை இறந்தனர், ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்தனர் மற்றும் ஏறத்தாழ ஐந்தாயிரம் வீடுகள் சாம்பலாயின.

 








All the contents on this site are copyrighted ©.