2009-08-24 14:50:23

அரசர் புனித 9ம் லூயிஸ் விழா


1226ம் ஆண்டு, தமது 11வது வயதில் பிரான்ஸ் மன்னனாக முடிசூட்டப்பட்ட 9ம் லூயிஸ், 19வது வயதில் திருமணம் முடித்து 10 பிள்ளைகளுக்குத் தந்தையானார். மகனே, பாவம் மிகக் கொடியது, உன்னை நான் மிகவும் அன்பு செய்கிறேன். எனினும் நீ ஒரு சாவான பாவம் செய்வதைவிட நீ எனது காலடியில் இறந்து கிடப்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்ன தனது தாயின் விருப்பப்படி தூயவராக வாழ்ந்தவர். ஏழைகள் மீது மிகுந்த கனிவு கொண்ட இவர், பார்வையற்ற 300 பேருக்கென இல்லம் அமைத்தார். தினமும் ஏழைகளுக்கு உணவு அளிப்பதோடு தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யவும் தவறமாட்டார். சாவான பாவம் செய்வதைவிட எல்லா வகையான துன்பங்களையும் ஏற்பதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்று கூறியவர் அரசர் புனித 9ம் லூயிஸ்.

இதே ஆகஸ்ட் 25,

1825 உருகுவாய் நாடு பிரேசிலிடமிருந்து விடுதலை அடைந்தது.

1921 அமெரிக்க ஐக்கிய நாடு ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

1924 சர்வதேச கடல்சார்ந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.