2009-08-22 15:00:38

பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உலக நலவாழ்வு நிறுவனம் கோரிக்கை


ஆக.21, 2009. வரும் மாதங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவும் என்பதால் அது பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு உலக நலவாழ்வு நிறுவனம் உலக அரசுகளைக் கேட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 200 கோடிப் பேர், அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வரை ஹைச் ஐய் எண் ஐ என்ற பன்றிக்காய்ச்சல் நோய்க் கிருமிகளால் தாக்கப்படக்கூடும் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுவரை உலகில் இந்நோயால் 1799 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 47 வயதான ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து, இக்காய்ச்சலுக்கு இந்தியா முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்












All the contents on this site are copyrighted ©.