2009-08-22 14:58:42

சிங்கப்பூர் திருச்சபை முதியோர்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்ற அழைப்பு


ஆக.22,2009 சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் முதியோர்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்றுமாறு அந்நாட்டின் முதியோர் நலத்துறை அமைச்சர் லிம் பூன் ஹெங் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூர் கத்தோலிக்க நலப்பணி அமைப்பு உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் லிம், சிங்கப்பூரில் வயதானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலையின்படி பார்த்தால், முதியோரைக் கண்காணிப்பதற்கான படுக்கைகள் இன்னும் பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்காகவும், இன்னும் இருபது ஆண்டுகளில் மூன்று மடங்காகவும் அதசிகரிக்கும் என்ற அச்சுறுத்தலையும் முன்வைத்தார் அவர்.

2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 65க்கும் அதற்கு மேற்பட்ட வயதைத் தாண்டியவர்களும் 3, 15, 800 பேர் இருந்தனர். இவ்வெண்ணிக்கை அந்நாட்டின் மொத்த ஜனத்தொகையான 36 இலட்சம் பேரில் 8.7 விழுக்காடாகும். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இது ஐந்து இலட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.