2009-08-22 14:54:33

கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்


ஆக.22,2009 கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாய பணி என்பதை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை மற்றும் உலக கிறிஸ்தவ சபைகள் அவையினால் 2010ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கென தயாரிக்கப்பட்டுள்ள ஏட்டில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களின் இக்கூற்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

1910ம் ஆண்டில் ஸ்காட்லாண்டின் எடின்பர்கில் தற்போதைய நவீன கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு வருகிற ஆண்டில் இடம் பெறுவதை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ்வேட்டில் கிறிஸ்தவ சபைகளின் முக்கிய பணி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளால் அனுப்பப்பட்ட மறைபோதகர்களுக்கிடையே போட்டிகள் நிலவியதை வருத்தத்தோடு குறிப்பிடும் அவ்வேடு, கிறிஸ்துவை முதல்முறையாக அறியும் மக்களுக்கு இத்தகைய பிளவுகள் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் எடின்பர்கில் கூடி ஒன்றாகச் செபித்து மறைப்பணி பற்றிய கூறுகளைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.