2009-08-22 14:59:38

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 39 கோடி எனச் சொல்லப்படுகிறது


ஆக.22,2009 இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 39 கோடி எனவும், இது அரசின் முந்தைய கணிப்பைவிட 10 விழுக்காடு அதிகம் எனவும் புதுடெல்லி ஹின்டுஸ்தான் டைம்ஸ் என்ற இதழ் தெரிவித்தது.

நாட்டின் ஏறத்தாழ 110 கோடி மக்களுள் ஏறத்தாழ 38 விழுக்காட்டினர் ஏழைகளாக உள்ளனர் என்று கூறும் அவ்விதழ், இந்த ஏழ்மை நிலையானது நகரங்களில் 2100 கலோரிகள் மதிப்பிலான உணவும் கிராமங்களில் 2400 கலோரிகள் மதிப்பிலான உணவும் வாங்க இயலாமல் இருப்பவர்கள் என்பதன் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

மேலும், இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வறட்சியினால் தானியப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டால், அவற்றை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிப்பது தொடர்பாக மாநில வேளாண்துறை அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வறட்சியால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நிலத்தடி நீர் வளமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முகர்ஜி சுட்டிக்காட்டினார்.

இன்னும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.