2009-08-22 14:57:42

அறிவியலும் மதமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பன, பேராயர் மெனாம்பரம்பில்


ஆக.22,2009 அறிவியலும் மதமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பன, ஒன்றுக்கு மற்றது மிகவும் தேவைப்படுகின்றது என்று இந்தியப் பேராயர் ஒருவர், “உலக அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் கிறிஸ்தவ விசுவாசம்” என்ற தலைப்பில் இடம் பெற்ற தேசிய கருத்தரங்கில் கூறினார்.

இந்திய தேசிய அறிவியல் மற்றும் சமய நிறுவனமும் இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார ஆணையமும் இணைந்து பூனேயில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில், உண்மையான அறிவியல் கடவுளை நோக்கிய வியத்தகு பாதையைத் திறந்து விடுகின்றது என்று கூறினார்.

இந்த அண்டம், ஓர் ஆன்மீக ஆய்வு கட்டுரையாக, இரையியல் புத்தகமாக இருக்கின்றது என்று விளக்கிய பேராயர் மெனாம்பரம்பில், இக்காலத்தில் இறையியலாரும் யோகிகளும் மட்டுமல்ல, அரிவியலாரும் மறையுண்மைகள் பற்றிப் பேசுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அறிவியலும் தொழிற்நுட்பமும் நம்மை ஆர்வமிக்க நுகர்வு ஆட்களாக மாற்றும், ஆனால் மதமோ வாழ்க்கையின் நோக்கத்திற்கான அர்த்தமுள்ள வழியைக் காட்டும் என்று இக்கருத்தரங்கில் விளக்கினார் பேராயர் மெனாம்பரம்பில்.

இவ்வியாழனன்று நிறைவு பெற்ற இத்தேசிய கருத்தரங்கில் இரண்டு வத்திக்கான் பிரதிநிதிகள் உட்பட 60 ஆயர்கள், இருபால் துறவு சபைகளின் அதிபர்கள் மற்றும் அறிவியலார் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.