2009-08-21 19:53:07

வத்திக்கானோடு பல துறைகளில் பிரேசில் அரசு ஒத்துழைப்பு . 210809 .


வத்திக்கான் திருப்பீடத்தோடு பல துறைகளில் பிரேசில் அரசு ஒத்துழைப்புத் தர உடன்பாடு செய்துள்ளது . ஒப்பந்தத்தைத் பிரேசில் நாட்டின் வெளியுறவுத்துறை அமைப்பு சென்றவாரம் வெளியிட்டதாக , இத்திங்கள் ரியோடி ஜெனெய்ரோவின் பேராயர் ஒராணி ஜான் டெம்பெஸ்டா தெரிவித்துள்ளார். 1889 ஆம் ஆண்டு குடியாட்சி தொடங்கிய பிறகு இதுவே முதல் முறையாக பிரேசில் அரசு கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சட்ட ரீதியாக நாட்டில் முழுமையான அதிகாரத்தோடு இயங்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது . இதன்படி கத்தோலிக்கச் சமயக் கல்வி அரசுக் கல்விக்கூடங்களில் பாடமாக அமைக்கப்படும். இந்த ஒப்பந்தப்படி நடைமுறையில் இருந்துவந்த சமரசப்போக்கும் ஒத்துழைப்பும் சட்டரீதியாக்கப்பட்டுள்ளது. சமயச் சார்பற்ற குடியாட்சி நாடாகிய பிரேசில் சமயச் சுதந்திரத்துக்குத் தடையாக இராது. திருச்சபைச் சட்டப்படி திருமணங்களை நடத்தவும் , கல்விக்கூடங்களை நடத்தவும் இந்த ஒப்பந்தம் அதிகச் சுதந்திரமளிப்பதாகப் பேராயர் ஒராணி ஜான் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வத்திக்கானுக்குப் பிரேசில் நாட்டுத் தலைவர் லூயிஸ் இன்னாசியோ லூலா வந்தபோது கையொப்பமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசு இதனை நாட்டின் கூட்டாட்சி மன்றத்தில் அடுத்தவாரம் அங்கீகாரம் செய்யவுள்ளது. பிரேசில் நாட்டின் 2 கோடி மக்கள் தொகையில் 74 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்கள்.15 விழுக்காடு மக்கள் பிரிவினைக் கிறிஸ்தவர்கள் .








All the contents on this site are copyrighted ©.