2009-08-21 20:01:04

பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன . 210809 .


பாகிஸ்தானில் மனித உரிமைகள் அதிகமாக மீறப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் 75 விழுக்காடு வழக்குகளில் தண்டனை தரப்படாது நிலுவையில் இருக்கின்றன . மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் புகார்களில் 8 ஆயிரம் வழக்குகள் இன்னும் விசாரணைக்கு வராதிருக்கின்றன என ஆசியச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மாவாட்ட அரசுக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாது இருக்கின்றன . சிந்துப் பகுதியில் 6 ஆயிரம் வழக்குகளில் 783 வழக்குகளே நீதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. பணப்பற்றாக்குறையே காரணம் என்கிறார் பாகிஸ்தானின் மனித உரிமை ஆணைய அமைச்சர் சையத் மும்தாஜ் ஆலம் கிலான் .








All the contents on this site are copyrighted ©.