2009-08-21 19:56:59

துருக்கியின் எர்டோகன் கிறிஸ்தவர் பிரச்சனைகளைக் கவனிப்பாரா .210809.


துருக்கி நாட்டின் தலைவர் எர்டோகன் சிறுபான்மை மக்கள் பிரச்சனைகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார் . திடீரென துருக்கியின் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயுவைச் சந்தித்தார் எர்டோகன். துருக்கியின் புயூகாடாத் தீவில் பிதாப்பிதாவுக்குச் சொந்தமான நிலங்களையும் சொத்துக்களையும் துருக்கி அரசு முன்னர் கையகப்படுத்தியது . இந்தச் சொத்துக்கள் பிதாப்பிதாவுக்குச் சொந்தம் என சென்ற ஆண்டு வழக்கை விசாரணைசெய்த ஐரோப்பிய நீதி மன்றம் கூறியிருந்தது . குடியாட்சியை நிலை நிறுத்துவதாகவும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பத் தருவதாகவும் சொல்லும் எர்டோகன் துருக்கி தேசியக்கட்சியின் தீவிரவாதப் போக்குக்கும் துணைபோவதால் இருமுகம் கொண்டவராக வர்ணிக்கப்படுகிறார்.








All the contents on this site are copyrighted ©.