2009-08-21 19:58:56

கேரளத்தில் கற்றோர் அதிகமாக இருப்பதற்குக் காரணம் கிறிஸ்தவமே.210809.


கேரளத்தில் கல்வி கற்றோர் அதிகமாக இருப்பதற்குக் காரணம் கிறிஸ்தவமே என்கின்றார் வரலாற்று ஆசிரியர் . இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முந்நாள் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியருமாகிய முனைவர் எம்ஜிஎஸ் நாராயணன் கேரளத்தில் 8 ஆவது நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவர்களின் வரலாறு இருப்பதாகவும் , 18 ஆவது நூற்றாண்டிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபை மக்களுக்குக் கல்வியறிவைத் தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முனைவர் நாராயணன் குஜராத்தின் அகமதாபாத்தில் மலையாள சங்கம் நடத்திய அன்னைமரியாள் விண்ணேற்பு விழா மற்றும் சுதந்திர தின விழாவின் போது இம்மாதம் 15 ஆம் தேதி அவரது உரையில் கத்தோலிக்கச் சமயத்தின் கல்வித்தொண்டினைப் பாராட்டிப்பேசினார். கேரளத்தின் பின்தங்கிய மக்களுக்கும் கத்தோலிக்க சமயமே சமூக முன்னேற்றத்துக்கும் வழிகாட்டியதாகத் தெரிவித்துள்ளார். மலையாள சங்க ஆண்டுவிழாவுக்கு முன்னர் நடந்த திருப்பலியில் காந்தி நகர்ப்பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்ணான்டஸ் , டெல்லி உதவி ஆயர் பிராங்கோ மூலக்கல் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அகமதாபாத் ஆயர் தாமஸ் மக்வான் கேரளமக்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராகக் கிளம்பும் தீவிரவாத சக்திகளையும் , சிறுபான்மையினர் , மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சக்திகளையும் இனம் கண்டுகொள்ளுமாறு தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.