2009-08-21 19:55:17

காந்தமால் சமயச் சார்பற்ற இந்தியாவின் புதைகுழி என்கிறது ஆய்வு.210809.


ஒரிசாவின் காந்தமாலைப் பற்றி ஆய்வு செய்து வெளியிடப்பட்ட நூல் புதுடெல்லியில் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை எழுதியவர் செய்தித் தொடர்பக எழுத்தாளர் அண்டோ அக்காரா . முன்னரே இந்நூல் ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது . ஏப்ரலுக்குப் பிறகு அந்நூலில் வேறு சில முக்கியப் பகுதிகளும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது . தேசிய நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பால் முந்நாள் இந்திய ஜெர்மானியத் தொண்டு நிறுவனத்தின் தூதர் கே.பி.பேபியன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. காந்தமால் இந்தியாவில் சமயச் சார்பற்ற பகுதிதானா என்ற கேள்வி எழக்கூடிய அளவுக்கு மாநில அரசும் இணைந்து மக்களை கிறிஸ்தவர்கள் என்பதற்காக அழிப்பது தெரியவந்துள்ளது. அங்கு நடந்த வன்முறைகளை ஆய்வு செய்த நீதிபதி எஸ்சி மகாபத்ரா என்பவர் குற்றவாளிகளுக்கு எவ்வளவு சார்பாக இருக்கிறார் என்பதை அவர் நூலாசிரியரிடம் கொலையாளிகளும் குற்றமற்றவர்களாக இருக்கலாம் எனக்கூறியுள்ளதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் நுழையவிடாது இன்னமும் தீவிர வாத சக்திகள் தடுப்பதாகவும் அதற்கு அரசும் துணை போவதாகவும் தெரிகிறது. அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளையும் மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. கோச்சப்பாதா குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்ததை இந்திய உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும் என வெளியிடப்பட்ட நூல் எச்சரிக்கிறது . காந்தமாலுக்கு வெளியே நீதி மன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது . சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நடந்த வன்முறையில் பலர் இறந்தனர் . காந்தமால் பகுதியில் 50,000 பேர் புலம் பெயரவேண்டில நிலை உருவாகியது . 5000 கிறிஸ்தவ வீடுகள் அழிக்கப்பட்டன. 250 கிறிஸ்தவ ஆலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன என்பதை வரலாறு மறக்கமுடியாது .








All the contents on this site are copyrighted ©.