2009-08-19 15:30:09

தென் கொரியாவின் முதல் கத்தோலிக்க அரசுத்தலைவர் கிம் தெ ஜூங் உயிரிழந்தது குறித்து கத்தோலிக்க ஆயர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்


ஆக.19,2009 தென் கொரியாவின் முதல் கத்தோலிக்க அரசுத்தலைவர் தாமஸ்மூர் கிம் தெ ஜூங் உயிரிழந்தது குறித்து அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்களும் அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்

தென் கொரியாவின் முன்னாள் அரசுத்தலைவரான கிம் தெ ஜூங் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் தனது அனுதாபச் செய்தியை வெளியிட்ட அந்நாட்டு கர்தினால் நிக்கோலாஸ் செயோங் ஜின்-சுக், கொரியாவில் முதன் முதலாக நொபெல் அமைதி விருதைப் பெற்ற இந்த அரசுத்தலைவர், தென் கொரியாவில் மனித உரிமைகளும் ஜனநாயகமும் காக்கப்படவும் கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் என்று பாராட்டியுள்ளார்.

கிம், தனது அரசியல் வாழ்வில் பல அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய போது தனக்குத் துன்பம் கொடுத்த அரசியல் எதிரிகளை மன்னித்தவர் என்றும் கூறும் கர்தினாலின் அச்செய்தி, மனித சமுதாயத்திற்காக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உதவியுடன் தனது துன்பங்களையும் சோதனைகளையும் எதிர் கொள்ள முடிந்தது என்று கிம் சொல்லியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவரின் இறப்பு குறித்து ஐ.நா.பொதுச் செயலரும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.