2009-08-19 15:31:57

சூடானில் அமைதிக்கான முயற்சிகளை எடுக்குமாறு கிறிஸ்தவ சபைகள்.வேண்டுகோள்


ஆக.19,2009 சூடான் நாடு சிதைந்து போவதிலிருந்து அதைக் காப்பாற்றுமாறும் அமைதிக்கான முயற்சிகளை எடுக்குமாறும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களையும் சர்வதேச சமுதாயத்தையும் கேட்டுள்ளன அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள்.

சூடான் கிறிஸ்தவ சபைகள் அவை நடத்திய நான்கு நாள் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், சூடானின் 2005ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முக்கிய தலைவர்கள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களையவதற்கு உடனடியாகச் செயலில் இறங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில் நாட்டின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்க்கமான உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் குழுக்களுடன் செயல்படுவதை காண முடிகின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சூடானில் 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டுச் சண்டையில் 20 இலட்சம் பேர் இறந்தனர் மற்றும் 40 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர்.

2005ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தின்படி, தென் சூடான் அரசு, சுயநிர்யணம் பற்றிய பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பை 2011ம் ஆண்டில் நடத்த வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. .

 








All the contents on this site are copyrighted ©.