2009-08-19 15:34:49

இந்தியாவில் பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டத் தடை


ஆக.19,2009 இந்தியாவில் பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவான சாலைகளிலும் பூங்காக்களிலும் புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டால் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

பொதுவான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட சட்டத்துக்குப் புறம்பே கட்டப்பட்டுள்ள அனைத்தையும் இடிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றம் நகரசபைகளுக்கு 2006ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.