2009-08-15 13:52:50

இலங்கை தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு, அம்முகாம்களில் வாழும் அருட்பணியாளர்கள் மடுமாதா விழாத் திருப்பலிகளை நிகழ்த்தியுள்ளனர்


ஆக.15,2009. இலங்கையின் புகழ் பெற்ற மடுமாதா திருத்தலத்தில் விழாக் கொண்டாட இயலாமல் தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு, அம்முகாம்களில் வாழும் அருட்பணியாளர்கள் திருப்பலிகளை நிகழ்த்தியுள்ளனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள இந்த மாதா திருத்தலம், ஐரோப்பாவின் லூர்து மற்றும் பாத்திமா அன்னை திருத்தலங்களுக்கு நிகராக இலங்கை மக்களால் போற்றப்படும் வேளை, அங்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இச்சனிக்கிழமை விழாக் கொண்டாடப்பட்டது.

திருப்பயணிகள் அங்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு இரயில் போக்குவரத்தையும் இலங்கை அரசு ஒழுங்கு செய்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

ஆகஸ்ட் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட மடுமாதா விழா நவநாள் பக்தி முயற்சிகள் அன்னைமரியின் விண்ணேற்பு விழாவான இச்சனிக்கிழமையன்று நிறைவு பெற்றன.












All the contents on this site are copyrighted ©.