2009-08-14 17:47:12

ஜப்பான் கத்தோலிக்கத் திருச்சபையின் பல்சமயக் கலந்துரையாடல்.140809.


ஜப்பான் கத்தோலிக்கத் திருச்சபையின் பல்சமயக் கலந்துரையாடலைப் பாராட்டுகிறார் கர்தினால்.

ஜப்பான் சென்று திரும்பிய வத்திக்கான் திருப்பீடத்தின் சர்வ சமயக் கலந்துரையாடல் மன்றத்தின் தலைவர் கர்தினால் ஜான் லூயிஸ் பியர் தவ்ரான் வத்தி்க்கான் வானொலிக்குக் கொடுத்த பேட்டியில் ஜப்பானின் பங்குத்தளங்களில் அடிமட்ட நிலையில் புறசமய மக்களோடு கிறிஸ்தவம் கலந்து பேசுவதைக் கர்தினால் தவ்ரான் பாராட்டினார். இந்தக் கலந்துரையாடல் சுமுகமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . ஆண்டில் ஒரு நாள் எல்லாப்பங்குகளிலும் மற்ற மத்தவரோடு இணைந்து செபம் செய்வதையும் கலந்து உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள ஜப்பான் கத்தோலிக்கத் திருச்சபையை பாராட்டி மகிழ்ந்தார் கர்தினால் ஜான் லூயிஸ் தவ்ரான். ஜப்பானில் 10 லட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பாதிப்பேர் வெளிநாட்டவர். திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மற்ற மதங்களோடு கத்தோலிக்க சபை கலந்து உரையாடுவதை முக்கியமாகக் கருதுவதாகவும் கர்தினால் தவ்ரான் தெரிவி்த்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.