2009-08-14 17:49:07

ஒரிசாவில் மதக் கலவரத்தைத் தடுக்க தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.140809.


ஒரிசாவில் மதக் கலவரத்தைத் தடுக்க தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது . இந்துமதத்தவர் கொண்டாடும் ஜென்மத்சமி விழாவை ஒட்டி காவல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்த விழாவின்போதுதான் ஆகஸ்ட் 23 தேதியில் 2008 ஆம் ஆண்டு சுவாமி இலட்சுமானந்த சரஸ்வதி கொல்லப்பட்டார் . அதை ஒட்டி கிறிஸ்தவர்கள்மீது பழிசுமத்தி கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் . காந்தமாலில் காவல் நிலையங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையோடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . சுவாமி இலட்சுமானந்த சரஸ்வதியின் சமாதி காந்தமாலில் இருப்பதால் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்படுகிறது . ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அச்சத்தோடுதான் வாழ்ந்து வருகிறார்கள் . அதே போல கர்நாடகாவிலும் மற்ற மாநிலங்களிலும் மதத்தீவிரவாதிகள் அவ்வப்போது கிறிஸ்தவர்களைத் தாக்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது . இம்மாதம் 11 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் அன்னிகெரே கடாக் மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது . ஆர் எஸ் எஸ் இயக்கம் இந்தியாவின் பல இடங்களிலும் தாக்குதலை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.