2009-08-14 17:46:46

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடும்ப வாழ்வு சிக்கல் .140809 .


அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடும்ப வாழ்வு சிக்கலில் இருப்பதாகக் கவலை வெளியிட்டிருக்கிறார் நியூயார்க்கின் பேராயர் டிமத்தி டோலன் . வாழ்வளிக்கக்கூடிய , அன்பைப் பரிமாறக்கூடிய , பிரமாணிக்கமுள்ள திருமண உறவு சிக்கலில் இருப்பதாகத் தெரிவித்தார் அவர் . நாம் குடும்ப வாழ்வைச் சீர்ப்படுத்தினால் திருச்சபைக்குத் தேவையான அளவு குருக்களும் கன்னியர்களும் கிடைப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்கொள்ளும் மற்ற சில பிரச்சனைகளாக பங்குப் பணித்தளங்கள் , பள்ளிகள் , கருணைப் பணிமனைகள் , மருத்துவ மனைகள் , திருச்சபையைப் புறக்கணித்து வாழும் கிறிஸ்தவர்களை மீண்டும் இறைப்பற்றில் வளர்ப்பது மற்றும் உலகோதயச் சிந்தனைகளால் தாக்கம் பெறுவதை சவாலாகச் சந்தித்தல் போன்றவற்றை பேராயர் டிமத்தி டோலன் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.