2009-08-13 16:13:53

கொழும்பின் பேராயர் ரஞ்சித் மிகப்பெரிய சொத்து, ராஜபக்சே.130809.


இலங்கையின் தலைநகர் கொழும்பின் பேராயர் மேதகு மால்கம் ரஞ்சித் மிகப்பெரிய சொத்து என்று வர்ணிக்கிறார் இலங்கையின் தலைவர் ராஜபக்சே .

கொழும்பின் முந்நாள் பேராயர் ஆஸ்வால்டு கோமசின் ஓய்வுக்குப் பிறகு மேதகு மால்கம் ரஞ்சித் கொழும்பின் பேராயராக வத்திக்கானால் நியமனமாகியுள்ளார். அவரக்குத் தலைநகர் கொழும்பில் பல் சமய மதங்களின் சார்பிலும் அரசியலார் சார்பிலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்களன்று பண்டாரா நாயக்கா அகிலஉலக நினைவு அரங்கத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது . வரவேற்றுப்பேசிய இலங்கைத் தலைவர் மகிந்தா ராஜபக்சே இலங்கைக்கு மேதகு பேராயர் மால்கம் ரஞ்சித்தை வரவேற்பதாகவும் அவர் அந்நாட்டுக்கு விலைமதிப்பில்லாத சொத்து என்றும் பாராட்டிப் பேசினார் . வரவேற்பு நிகழ்ச்சியின்போது முந்நாள் பேராயர் ஆஸ்வால்டு கோமஸ் மற்றும் முந்நாள் இலங்கைத் தலைவர் சந்திரிகா பண்டாரா நாயக்கே மற்றும் அரசியல் தலைவர்கள் , எதிர்க்கட்சித் தலைவர்கள் சமயப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு புதிய பேராயருக்கு வரவேற்புக் கொடுத்தனர் . இலங்கையின் புத்தமதத் தலைவர் வஜீராவும் கலந்து கொண்டார் . இலங்கையின் 2 கோடி மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினர் புத்தமதத்தவராவர் . நிகழ்ச்சியில் பேசிய பேராயர் ரஞ்சித் சில கிறிஸ்தவர்களின் உறவினர்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். இலங்கையில் வாழும் கிறிஸ்தவர்கள் மதச் சுதந்திரத்தோடு தங்கள் சமயத்தைப் பின்பற்ற உரிமைகள் வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையின் வடபகுதியும் தென்பகுதியும் நல்லிணக்கத்தோடு வாழ அரசு ஆவன செய்யவேண்டும் எனவும் பேராயர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார். நாட்டில் அமைதியைக் கொண்டுவர விரைவாக தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அரசு பொறுப்பான முறையில் செயல்படவேண்டும் எனவும் பேராயர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.