2009-08-13 16:11:01

கிறிஸ்தவர்களுக்கு ஈராக்கில் தக்க பாதுகாப்புத் வேண்டும். 130809 .


பாக்தாத்தின் முந்நாள் வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பெர்னான்டோ பிலோனி . 2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரை அங்குப் பணிசெய்திருக்கிறார். அவர் வத்திக்கானின் செய்தி ஏடு லொஸ்ஸர்வாத்தோரே ரொமானோவுக்குத் தந்த செய்தியில் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்கள் ஈராக்கில் சிறுபான்மை மக்களாக இருந்தாலும் அவர்கள் மரியாதையோடு நடத்தப்பட்டு மற்றவர்களோடு சம உரிமைகள் வழங்கப்படத் தேவையான எல்லா முயற்சிகளையும் அரசு எடுக்கவேண்டும் என பேராயர் பெர்னான்டோ பிலோனி தெரிவித்துள்ளார் . அமெரிக்கா பாக்தாத்தைக் குண்டுவீசித் தாக்கியபோது ஈராக்கை விட்டு வெளியேறாத ஒரே வெளிநாட்டுத் தூதர் பெலோனி என்பது அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. தற்போது பேராயர் பிலோனி வத்திக்கானில் துணைச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே ஈராக்கிய அரசு 40 ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் 3 பள்ளிகளை அவர்களிடம் திருப்பிக்கொடுத்துள்ளது. அவை சதாம் உசேனால் பிடுங்கப்பட்டவை . 2 பள்ளிகள் பாக்தாத்திலும் ஒன்று கிர்க்குக் நகரிலும் இருக்கின்றன . இம்மாதம் 12 ஆம் தேதி லொஸ்ஸர்வாரே ரொமானோ செய்தி ஏடு வழியாக கல்தேயத் திருச்சபையின் கர்தினால் எம்மானுவேல் மூன்றாவது தெல்லி பள்ளிகளைத் திருப்பித் தந்ததற்காக ஈராக்கின் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்பள்ளிகள் அனைத்து சமய மக்களுக்கும் கல்வி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.