2009-08-13 16:07:18

கருச்சிதைவுக்கு ஊக்கமளிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல கர்தினால்.130809.


பிலடெல்பியாவின் கர்தினால் ஜஸ்டின் ரீகாலி அமெரிக்கக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்குழுவில் வாழ்வை ஊக்குவிக்கும் மன்றத் தலைவராக இருக்கிறார் . அமெரிக்காவில் பழங்காலமாக இருந்து வரும் கருச்சிதைவுக்கு எதிரான சட்டங்கள் காக்கப்படவேண்டும் எனக் கர்தினால் ஜஸ்டின் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் சட்டமன்றத்துக்கு எழுதியனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொண்டுவரப்படும் நலம்காக்கும் சட்டத்தில் கருச்சிதைவை ஆதரிக்கும் போக்கு இருப்பதாகவும் அது தவறானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நலம் காக்கும் சட்டங்கள் வாழ்க்கையை உறுதிசெய்து வளப்படுத்தி ஊக்குவிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். மாநிலங்கள் கருச்சிதைவுக்கு எதிரான சட்டங்களைப் பாதுகாப்பதற்கும் , மக்கள் மனச் சான்றுப்படி கருச்சிதைவை எதிர்ப்பதற்கும் பாராளுமன்றம் தடைசெய்யாதிருப்பதை கர்தினால் ரீகாலி வரவேற்றுள்ளார். பெரும்பாலான அமெரிக்கர்கள் கருச்சிதைவை உடல்நல இன்சூரன்ஸ் பாலிசியில் சேர்க்கவிரும்புவதில்லை என்றும் , பெரும்பான்மையான அமெரிக்கர்கள் கருச்சிதைவை ஆதரிப்பதில்லை எனவும் கர்தினால் ஜஸ்டின் ரீகாலி தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.