2009-08-13 16:09:19

ஈரானில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகச் செய்திகள்.130809 .


கடந்த சில வாரங்களில் ஈரான் அரசு இஸ்லாமிய மதத்திலிருந்து மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துள்ளவர்களை அதிகமாகத் துன்புறுத்தி வருகிறது. கடந்த மாத இறுதியிலும் , இம்மாதம் 7 மற்றும் 9 தேதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலரை சிறைப்படுத்தியுள்ளது ஈரான் அரசு . ஈரானில் உள்ள எவின் சிறை கைதிகளை மிகவும் கொடுமைப் படுத்தக்கூடிய சிறைச்சாலை. இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மதம்மாறிய இரண்டு பெண்கள் துன்புறுத்தல்களைத் தாங்கிக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை மறுதலிக்க மறுத்துவிட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன .

அமெரிக்காவின் அகில உலக மதச் சுதந்திர மன்றம் ஈரான் நாட்டில் சிறுபான்மை மதத்தவரைக் கொடுமைப் படுத்தும் போக்கு கவலை தருவதாகத் தெரிவித்துள்ளது. 6 கோடியே 60 லட்சம் மக்கள் வாழும் ஈரானில் 2 லட்சம் பேர் மட்டுமே கிறிஸ்தவர்கள் . ஈரானிய அரசு கிறிஸ்தவர்களை வேறுபடுத்தி ஒதுக்கி வருவதாகவும் தெரிகிறது . கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிப்பதோ , இஸ்லாம் மதத்திலிருந்து மதம் மாறுவதோ தடை செய்யப்பட்டுள்ளது .ஈரானிய அரசு கிறிஸ்தவர்களை சிறைப்படுத்துவதாகவும் கிறிஸ்தவ ஆலயங்களை மூடச் சொல்வதாகவும் காம்பஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.