2009-08-11 18:19:31

ஆகஸ்ட் 12. புனிதை ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தாள்.கிபி 1562 – 1641 .


ஜேன் பிரான்செசுக்குத் திருமணம் நிகழ்ந்தது .6 பிள்ளைகளின் தாயானார் . பின்னர் பெண்களின் துறவற சபையொன்றை நிறுவிப் புகழும் பெற்றார் . இவர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்தவர் . 21 வயதில் தே ஷாந்தால் பிரபு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் . தம் அரண்மனைச் சூழலில் அன்றாடத் திருப்பலியின் பழக்கத்தைப் புதுப்பித்தார் . இன்னும் பற்பல பிறரன்புத் தொண்டுகளிலும் ஈடுபட்டார் . 7 ஆண்டுகளுக்குப் பின் இவருடைய கணவர் கொல்லப்பட்டார் . அதனால் இவர் ஆறாத்துயரத்துக்குள்ளானார் .

பின்னர் எல்லாவிதமான பெண்களுக்கும் வசதியான மினவினசபையைத் தோற்றுவித்தார் . பிளேக் நோய் பிரான்சு நாட்டை உலுக்கியது . மருமகனையும் மருமகளையும் இழந்தார் . தம் மடத்துச் சொத்துக்களையெல்லாம் பிளேக் நோயாளிகளைப் பேணுவதில் செலவிட்டார் . இறைப்பற்றுதல் மிக்க ஜேன் ஷாந்தாள் 38 வயதில் முழுமையாகத் துறவறத்தை மேற்கொண்டார் . அவருடைய ஆழ்ந்த இறைப் பற்றே அவருடைய புண்ணியங்களுக்கு அடித்தளமாக இருந்தது என்கிறார் அவருடைய ஆன்ம குருவானவர் புனித பிரான்சிஸ் சலேசியார் .








All the contents on this site are copyrighted ©.