2009-08-10 14:37:10

ஆகஸ்ட் 11 புனித கிளாரா


புனித கிளாரா, 1194ம் ஆண்டு பிரபு குலத்தில் பிறந்தவர். 1212ம் ஆண்டில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் தவக்கால மறையுரையைக் கேட்டு துறவு வாழ்வை மேற்கொண்டார். பின்னர் இவரைப் பின்பற்றி இவரது சகோதரிகளும் தாயும் இவர் தொடங்கிய சபையில் சேர்ந்தார்கள். இவரது சபையின் ஒழுங்கு, ஏழ்மையைப் பற்றியது மற்றும் அசிசியாரின் சபை ஒழுங்குகளைப் போன்றது. புனித கிளாரா, தமது 59வது வயதில் 1253ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார்.

இதே ஆகஸ்ட்11, கிமு 2492 - அர்மீனியா அமைக்கப்பட்டது

கிமு 586 - எருசலேமில் சாலமோன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது.

1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது

1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு கொண்ட 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு இறந்தனர்.

1960 - சாட் பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது.

1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.








All the contents on this site are copyrighted ©.