2009-08-08 14:52:02

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள்


ஆக.08,2009 சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் எல்லைப் பிரச்சனையைத் தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் இரு நாடுகளும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மையும் பதற்ற நிலையும் காணப்பட்டாலும் பரஸ்பர வர்த்தக உறவுகள் விரிவடைந்துவரும் வேளையில் புதுடில்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பான்மையான பகுதி உட்பட இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் ஏறத்தாழ 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை சீனா தனக்குச் சொந்தமாக எடுக்க முயற்சித்து வருகின்றது. இதனை தென் திபெத் என்றழைக்கவும் திட்டமிட்டுள்ளது.

1963ம் ஆண்டில் பாகிஸ்தான் சீனாவுக்குக் கொடுத்த 5,180 சதுர கிலோ மீட்டர் உட்பட காஷ்மீரின் வட எல்லையிலுள்ள அக்சாய் சின் பகுதியில் ஏறத்தாழ 43,180 சதுர கிலோ மீட்டரை இந்தியா எடுக்க முயற்சித்து வருகின்றது.

இராணுவ ரீதியாக சீனா தன் பலத்தை உறுதியாக வளர்த்து வருவது குறித்தும் பாகிஸ்தான், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் அது தன் செல்வாக்கை அதிகரித்து வருவது பற்றியும் இந்தியா கோபம் கொண்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.








All the contents on this site are copyrighted ©.