2009-08-07 13:56:29

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தில் கல்விக்கும் சமூகநலப் பணிகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் பணி அளப்பரியது, கர்தினால் மிக்காய்


ஆக.07,2009. புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தில் கல்விக்கும் சமூகநலப் பணிகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் பணி அளப்பரியது என்று அந்நாட்டின் முதல் கர்தினால் மைக்கிள் மிக்காய் கிட்புஞ்சு கூறினார்.

பாங்காங்கின் பேராயராக 36 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் கர்தினாலாக 26 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் சேவை செய்து இம்மாதம் 16ம் தேதி இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் கர்தினால் மிக்காய், யூக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மறைப்பணித் தளமாக இருந்த தாய்லாந்து திருச்சபை, இந்தத் தனது பணிக்காலத்தில் உள்ளூர் சமூகத்தினரைக் கொண்ட திருச்சபையாக மாறியதையும் குறிப்பிட்ட அவர், அரசியலில் இடம் பெறும் மோதல்கள் உட்பட தற்போது தாய்லாந்து எதிர்நோக்கும் சவால்களையும் முன்வைத்தார்.

முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தின் தென் பகுதியில் இடம் பெறும் வன்முறையில் 2004ம் ஆண்டிலிருந்து 3500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதையும் கர்தினால் மிக்காய் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.