2009-08-06 12:30:13

ஆகஸ்ட் 07 புனித 2ம் சிக்ஸ்துஸ் பாப்புவும் தோழர்களும், கயத்தான்


இன்று புனித 2ம் சிக்ஸ்துஸ் பாப்புவும் தோழர்களும், கயத்தான் போன்றோர் விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. மார்ட்டின் லூத்தர், கயத்தான், லொயோலா இஞ்ஞாசியார் ஆகியோர் சமகாலத்தவர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இவர்கள் திருச்சபையில் மலிந்து கிடந்த தீமைகளை அகற்ற முயன்றனர். லூத்தர் திருச்சபையை விட்டு வெளியேறி 1517ம் ஆண்டில் தனது 95 எதிர்ப்பு வாதங்களை விட்டன்பர்க் அரண்மனைக் கதவில் ஒட்டினார். ஆனால் புனித கயத்தான் அதே ஆண்டில் விச்சென்ஸாவில் தீராத நோயாளிகளைப் பேணுவதற்கு ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். பதுவாவில் சட்டக்கலை பயின்ற இவர் தமது 36 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். கயத்தானின் நற்செயல்களுக்கு உதவி செய்ய வந்தோரிடம், முதலில் இறையரசைத் தேடுங்கள் என்று சொல்வார்.

1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1933 – ஈராக் அரசு சுமைல் என்ற கிராமத்தில் 3,000 த்துக்கு மேற்பட்ட அசீரியர்களைப் படுகொலை செய்தது. இத்தினம் அசீரிய மறைசாட்சி தினமாக மாறியது.

1941 - நோபல் பரிசு பெற்ற மகாகவி இரவீந்திரநாத் தாகூர் இறந்தார்.

1945 - இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1960 - ஐவரி கோஸ்ட் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது.

1976 - வைக்கிங்2 விண்கலம் செவ்வாய் கோளின் சுற்று வட்டத்துள் சென்றது








All the contents on this site are copyrighted ©.