2009-08-03 14:05:31

ஆகஸ்ட் 04 புனித மரிய வியான்னி அருளப்பர்


புனித மரிய வியான்னி அருளப்பர் பங்குத் தந்தையர்களின் பாதுகாவலர். 1786ல் பிரான்சில் பிறந்த இவர், 18வது வயதில் குருமடத்தில் சேர்ந்த போது இலத்தீன் அறிவு மிகக் குறைவாக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆயினும் இவரது ஆழ்நத ஞானத்தைக் கண்ட ஓர் ஆசிரியர் தாய்மொழியில் வேதக்கலையைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் 25வது வயதில் குருப்பட்டம் பெற்றார். ஆர்ஸ் நகர் பங்குத்தந்தையாக இருந்த இவர் மணிக்கணக்கில் ஒப்புரவு அருட்சாதனம் கேட்பார். ஒருமுறை அவரது ஆயரிடம், மறைமாநிலம் முழுவதும் மனந்திரும்ப வேண்டுமா, அவ்வாறாயின் எல்லாப் பங்குத்தந்தையரும் புனிதராக வேண்டும் என்று கூறினார். 1859ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு கடந்த ஜூன் 19 முதல் சர்வதேச குருக்கள் ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதே ஆகஸ்ட்4,

70 - உரோமையர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது

1521 திருத்தந்தை ஏழாம் உர்பான் பிறந்தார்

1947 – ஜப்பானில் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

1984 – வுப்பர் வோல்ட்டா என்ற ஆப்ரிக்கக் குடியரசு புர்கினோ பாசோ என்று பெயர் மாற்றம் பெற்றது.

1990 - வளைகுடாச் சண்டை தொடங்கியது.

2006 – ஆக்சன் பியாம் என்ற வறுமைக்கு எதிரான அரசு சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.