2009-08-01 14:53:15

இந்தியாவில் இலவசக் கல்வி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது


ஆக.,01,2009. இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறும் உரிமையை கட்டாயமாக்கும் சட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின்படி பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியில் சேர்வதற்குமுன்பே நன்கொடை பெறுவதையும், குழந்தையிடமோ, பெற்றோரிடமோ நேர்முகத் தேர்வு நடத்துவதையும் இம்மசோதா தடை செய்கிறது

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலால் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்சமயம் 7 கோடிச் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை மற்றும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள் என்று அரசு கணித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.