2009-07-29 18:59:30

நைஜீரியாவில் அமைதியை வலியுறுத்துகிறார் பேராயர் . 290709 .


நைஜீரியாவின் தாலிபான் என அழைக்கப்படும் இஸ்லாமிய அமைப்பு போக்கோ ஹாரம் . நைஜீரியாவின் மையப்பகுதியில் உள்ள காவலர்கள் அலவலகங்கள் , கிறிஸ்தவக் கோயில்கள் ஆகியவற்றைத் தாக்கியதில் 100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் . நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைதுகுரியில் 5 கிறிஸ்தவக் கோயில்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன . ஒரு புரோட்டஸ்டண்டு பாதிரியார் கொல்லப்பட்டுள்ளார் . வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி அளித்த நாம்பி ஓபாசி என்ற நைஜீரியாவின் குழப்பத்தை ஆராய்ந்துவரும் ஒருவர் நைஜீரியாவின் உள் நாட்டுப்போர் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களு்க்குமிடையே இல்லை . இஸ்லாம் தீவிரவாதத்தைப் புகுத்த நினைக்கும் போக்கோ ஹாரம் அமைப்புக்கும் நைஜீரியாவின் அரசுக்குமிடையே நடக்கும் போர் என வர்ணித்துள்ளார் . அங்கு வாழும் 1 கோடியே 460 லட்சம் மக்களில் 50 விழுக்காடு மக்கள் இஸ்லாமியர் . 40 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவர்கள் . நைஜீரியாவில் இன , மத , அரசியல் சண்டைகள் நாட்டை சீரழித்து பின் நோக்கிச் செலுத்துவதாக நைஜீரியாவின் பேராயர் இக்னேஷியஸ் அயோ கூறுகிறார் . கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கலந்து பேசி நைஜீரியாவில் நிரந்தர அமைதிக்குத் திட்டமிட உள்ளார்கள் .








All the contents on this site are copyrighted ©.