2009-07-27 15:05:42

ஜூலை 28 புனிதை அல்போன்சா விழா


கேரளாவின் கமலம் என்றழைக்கப்படும் புனிதை அல்போன்சா விழா. இவர் கேரளாவின் பர்ணஞானம் என்ற சிற்றூரில் 1910ம் ஆண்டில் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவரது தாய் இறந்தார். இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்ற சித்தியின் ஆசையை புறக்கணித்து கிளாரிஸ்ட் துறவு சபையில் சேர்ந்தார். அங்கு அனைவரிடத்தும் தொண்டு மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தொடர்ந்து நோயினால் கஷ்டப்பட்ட அல்போன்சா நோயின் வேதனைகளை இறுதிவரைப் பொறுமையுடன் ஏற்றாள். 1946ம் ஆண்டு தமது 36வது வயதில் இறந்தார்.

1057 – திருத்தந்தை இரண்டாம் விக்டர் இறந்தார்.

1586- முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.

1821 – பெரு நாடு, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் போர் தொடுத்தன.

1943 - இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 42,000 ஜெர்மானியர்கள் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.