2009-07-25 14:35:18

ருவாண்டாவில் இனப்படுகொலைகள் இடம் பெற்ற போது வீரத்துவமாகச் செயலாற்றிய இத்தாலிய மறைபோதகக் குரு ஒருவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்


ஜூலை25,2009. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் 1994ம் ஆண்டு இடம் பெற்ற இனப்படுகொலைகள் அட்டூழியங்களின் போது வீரத்துவமாகச் செயலாற்றிய இத்தாலிய மறைபோதகக் குரு ஒருவர் இவ்வாரத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் ருவாண்டாவில் மறைப்பணியாற்றி வரும் அருள்திரு மாரியோ பல்கோனி என்பவர் தனது முஹூரு பங்கு ஆலயத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட துட்சி இனமக்களை மறைத்து வைத்து காப்பாற்றியதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார் என்று தேசிய வானொலி அறிவித்தது.

இபுக்கா என்ற இனப்படுகொலையில் காப்பாற்றப்பட்டவர்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் இக்குரு உட்பட பத்துபேர் இதே காரணத்திற்காக கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அருள்திரு பல்கோனி, கிறிஸ்து தமது திருச்சபையைப் பாதுகாப்பது போல தானும் அம்மக்களைக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்றியதாகக் கூறினார்.

1994ம் ஆண்டில் ருவாண்டாவில் இடம் பெற்ற இனப்படுகொலையில் சுமார் எட்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.