2009-07-24 17:15:24

மாஸ்கோவின் பேராயர் பள்ளிகளில் மதக்கல்வியை வரவேற்றார்.270709 .


மாஸ்கோவின் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பவுலோ பெட்சி . இம்மாதம் 21 ஆம் தேதி ரஷ்யாவின் அதிபர் டிமித்ரி மெத்வெதேவ் பொதுப்பள்ளிக்கூடங்களில் மதங்கள் பற்றிய கல்வி இடம் பெறும் என அறிவித்துள்ளார் . ரஷ்யா கடவுள் பற்றில்லாத கம்யூனிச நாடாக முன்னர் இருந்தது . தற்போது மதக்கல்வி அங்கு வழங்கப்படுவது புரட்சிகரமான செயல். இம்மாதம் 23 ஆம் தேதி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் பவுலோ பெட்சி தற்போது ரஷ்யாவில் வாழ்வுக்கு அர்த்தம் காணும் விருப்பம் அதிகரித்துள்ளதாகவும் மதங்கள் இதற்கு வழிவகுக்கும் என நம்பப்படுவதாகவும் தெரிவித்தார் . ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வெதேவ் ரஷ்யாவில் உள்ள 18 பகுதிகளில் உள்ள 12 ,000 நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் மதச் சார்பான கல்வி மற்றும் நன்னெறிப் பாடம் ஆகியவற்றைத் தேர்ந்து படிப்பதற்கு வழிசெய்யப் போவதாக அறிவித்துள்ளார் . ரஷ்யாவில் கத்தோலிக்க மதம் சிறுபான்மை மதமாக உள்ளது .கத்தோலிக்க மாணாக்கரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் கத்தோலிக்கச் சமயம் பற்றிய கல்வியை வழங்க அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கலாம் எனப் பேராயர் பெட்சி தெரிவித்தார் . மதம் சம்பந்ததப்பட்ட கல்வியைப் புகுத்த உள்ள அரசுக்கு கத்தோலிக்க சமயம் பாடத்திட்டங்களில் வழிகாட்டத் தயாராக இருப்பதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.