2009-07-24 17:06:18

திருத்தந்தை மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புப் பற்றிய தகவல்.2407.


ஜுலை 10 தேதியில் நடந்த திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .



வத்திக்கான் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் மீகுவல் டயஸ் அந்நாட்டின் சட்ட மன்ற வெளியுறவுத்துறை உறுப்பினர்களுக்கு திருத்தந்தை மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புப்பற்றி செய்தி வழங்கினார் . வத்திக்கானுக்கான அமெரிக்கத் தூதர் திரு மீகுவல் டயஸ் ஒரு இறையியல் பேராசிரியர் . திருத்தந்தையும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிப் பேசியதாகவும் , முஸ்லிம் நாடுகளோடு தொடர்பு , வாழ்வோடு தொடர்புடைய நன்னெறிக் கோட்பாடுகள் , குழந்தைகளைக் கருச்சிதைவு செய்வது , கியூபா மற்றும் ஹொண்டூரா நாடுகள் பற்றிப் பேசியதாகவும் மன்றத்தில் தெரிவித்தார் . ஜூலை மாதம் 10 ஆம் தேதி மாலையில் திருத்தந்தை 16 பெனடிக்ட் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தம் வத்திக்கான் மாளிகையில் வரவேற்றுப் பேசினார் . அதுபோது அவர்கள் உயிர் வாழ்வைப் பாதுகாத்து ஊக்குவிப்பது பற்றியும் , கலாச்சாரம் மற்றும் மதங்களோடு கலந்துரையாடல் , அகில உலக பொருளாதார நெருக்கடி , உணவுப் பாதுகாப்பு , ஆப்பிரிக்காவுக்கும் இலத்தீன் அமெரிக்காவுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் , போதைப் பொருள் தடுப்புப் பற்றியும் பேசியதாகவும் திரு. மீகுவல் டயஸ் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.