2009-07-24 17:30:31

ஒரிசாவில் இந்துத் தீவிரவாதியைக் கொன்றவர்கள் சரண். 240709 .


இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் மாவோ கட்சியைச் சேர்ந்த தம்பதியர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவாமி லக்சுமானந்த சரசுவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் எனக் கூறி காவலர்களிடம் சரணடைந்துள்ளார்கள் . ஒரிசாவின் ராயாகாடா மாவட்டப் போலீஸ் அலுவலகத்தில் கணவனும் மனைவியும் சரணடைந்துள்ளார்கள் . 20 வயதுடைய சுரேந்திர பிரெக்கேடாவும் அவரது மனைவி 19 வயதுடைய ஜெயா ரூபியும் இந்திய மாவோ கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் . சுவாமி கொலை வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அஷீஸ் குமார் சிங்கிடம் தெரிவித்துள்ளனர் . இதற்கு முன்னர் காவலர்கள் சென்ற ஏப்ரல் மாதம் 40 வயதுடைய ராமராவையும் கைது செய்தனர் . அவரும் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார் . சுவாமி சமூகத்தில் அமைதியின்மைக்குக் காரணமாக இருந்ததாக முன்னரே மாவோ கட்சியினர் அவரை எச்சரித்திருந்தனர் . அவர் எச்சரிப்புக்குச் செவிமடுக்காததால் கொலை செய்யப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர் . இருப்பினும் கிறிஸ்தவர்களுக்கு மதத் தீவிர வாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.