2009-07-23 20:35:30

போலந்து நாட்டின் யூதப் பாரம்பரியம் . 230709 .


போலந்து நாட்டின் யூதப் பாரம்பரியத்தைக் காப்பதற்காக எபிரேய மன்றத்தைத் தொடங்கியுள்ளார்கள் அந்நாட்டின் பிரான்சிஸ்கன் சபையினர் . போலந்து நாட்டின் பொது ஆவணச் சுவடிக்கூடம் ஏராளமான யூத மரபுச் சிந்தனைகளைக் கொண்டுள்ள ஆவணங்களைக் கொண்டிருக்கின்றன . அவற்றை முறைப்படுத்தி அட்டவணையிட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எபிரேய சங்கத்தின் தலைவர் தந்தை மாக்சிமின் டாண்டெக் தெரிவித்துள்ளார் . போலந்து நாட்டின் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் சீவிசும் , அந்நாட்டின் தலைமை யூத ராபியும் இந்த முயற்சி்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.