2009-07-23 20:33:05

இஸ்பானியாவின் கருச்சிதைவுச் சட்டத்திற்கு கர்தினால் எதிர்ப்பு .2307


கர்தினால் கனிசாராஸ் வத்திக்கான் திருப்பீடத்தின் வழிபாடு மற்றும் அருட்சாதன மன்றத்தின் தலைவர் . பாதுகாப்பு இல்லாதவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய சட்டங்கள் வலுக்குறைந்தவர்களையும் பாதுகாப்பு இல்லாதவர்களையும் அப்பாவி மக்களையும் நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார் கர்தினால் . இஸ்பானியாவின் மன்னர் ஜூவான் கார்லோஸ் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியபோது அவர் இதைத் தெரிவித்தார் . மருந்து நோய் நீக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர உயிரைப்பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது தவறு என்றும் சட்டங்கள் மனித உயிரைக் காப்பதற்குப் பதிலாக கொல்வதற்குப் பயன்படுவதாகத் தெரிவித்தார் கர்தினால் கனிசாராஸ் . கருச்சிதைவால் உயிர்கள் பலியாவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டுக்கு 4 கோடியே 70 இலட்சம் கருக்கள் சட்டத்தின் துணையோடு அழிக்கப்படுவதாக உலக நல ஆணையகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . அவ்வாறு கருச்சிதைவு செய்து கொள்பவர்கள் கத்தோலிக்கச் சபையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டவர்கள் என்ற கர்தினால் கருச்சிதைவு பெருங்குற்றம் என்றும் அதைவிடக் கொடுமையான பாவம் என்ன உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார் .








All the contents on this site are copyrighted ©.