2009-07-23 20:37:24

இலங்கையில் குழந்தைப் போராளிகளின் நிலைமை. 230709 .


இலங்கையில் குழந்தைப் போராளிகளின் நிலைமை கவலை தருவதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவி்க்கின்றன .

வன்னி முகாம்களில் பெற்றோரிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக விடப்பட்டுள்ள 14 லிருந்து 16 வயதுடைய போராளிகள் கடுமையான உடல் நலக்கேட்டுக்கு உள்ளாவதாகவும் மிரட்டலுக்கு உள்ளாவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன . முகாம்களில் அரசு இராணுவம் ரோந்து வருவதால் இளம் போராளிகள் தொல்லைகளுக்கு ஆளாவதாகவும் அவ்வப்போது சிலர் கொல்லப்படுவதாகவும் , விளக்கம் ஏதும் இல்லாது காணாமல் போவதாகவும் தெரிவிக்கின்றன செய்திகள் . இளம் போராளிகள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதால் மன நல உதவி அவர்களுக்குத் தேவைப் படுவதாகவும் போதுமான உணவு தரப்படாததால் நோயுற்றிருப்பதாகவும் வயிற்றுப்போக்கு நோய்க்கு உள்ளாகியிருப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன . தொண்டு நிறுவனங்கள் சிறார்களுக்கு உதவுவதை அரசு தடை செய்துள்ளது . முகாம்களுக்குள்ளே நடக்கும் கொடுமைகளை குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கள்

மேற்பார்வையிட்டு வெளி உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அகில உலக நிறுவனங்கள் இலங்கை அரசை வற்புறுத்தி முகாம்களைச் சோதனையிட அனுமதி பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.