2009-07-22 13:58:29

அமெரிக்க நலவாழ்வை பாதுகாக்கும் அமைப்புமுறை மனித வாழ்வை மதிப்பதாயும் இருக்குமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது


ஜூலை22,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டில் நலவாழ்வை பாதுகாக்கும் அமைப்புமுறை எல்லாருக்கும் எளிதில் கிடைப்பதாயும் எல்லாருக்கும் பயனுள்ளதாயும் மனித வாழ்வை மதிப்பதாயும் இருக்குமாறு அதைச் சீரமைக்க வேண்டுமென அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை நாட்டின் நலவாழ்வை பாதுகாக்கும் அமைப்புமுறையில் சீர்திருத்தம் கொணடுவருவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ள இவ்வேளையில், அந்நாட்டு ஆயர் பேரவையின் குடும்ப நீதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கான ஆணையத்தலைவர் ஆயர் வில்லியம் மர்ப்பி, காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு நலவாழ்வுக் கொள்கைகள், மனச்சான்றின் சுதந்திரம், மனித வாழ்வு மற்றும் மனித மாண்பை மதிப்பதாய் இருக்க வேண்டுமென ஆயர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.