2009-07-21 15:08:02

தூர் து பிரான்ஸ் விளையாட்டு வீரர்களுக்கு திருத்தந்தை வாழ்த்துக்கள்


ஜூலை 21,2009. இவ்வாண்டின் தூர் து பிரான்ஸ் என்ற மிதிவண்டி தொடர் பயணத்தின் ஒரு பகுதியாக இச்செவ்வாயன்று திருத்தந்தை தங்கியிருக்கும் வாலே தவோஸ்தா பகுதியைக் கடந்து சென்ற விளையாட்டு வீரர்களுக்கு தன் வாழ்த்துக்களை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3500 கிலோ மீட்டரை மிதிவண்டி மூலம் ஜூலை 4 முதல் ஜூலை 26 வரை கடந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு விளையாட்டும் மனிதனின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாக இருப்பதுடன் ஒழுக்கரீதி மற்றும் கல்வி மதிப்பீடுகளுடன் இணைந்ததாயும் உள்ளது என்றார்.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய இப்பிரான்ஸ் விளையாட்டு வீரர்களின் மிதிவண்டி பயணம் வரும் ஞாயிறன்று நிறைவு பெறும்







All the contents on this site are copyrighted ©.